பாகன் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலி அம்னோவிலிருந்து வெளியேறி விட்டார். இப்போது அவர் டாக்டர் மகாதிரையும் பக்கத்தான் ஹரப்பானின் பெடரல் மற்றும் மாநில அரசுகளை ஆதரிப்பதாக கூறுகிறார்.
தற்போதைக்கு தாம் ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும், ஆனால் பெர்சத்துவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.