பிஎன்னிலிருந்து வெளியேறிய கெராக்கான் செனட்டர் பதவிகளையும் துறக்க வேண்டும்

பிஎன்  கூட்டணியிலிருந்து   வெளியேறிய   கெராக்கான்      பிஎன்னில்  இருந்தபோது   கிடைத்த    செனட்டர்   பதவிகளையும்   கைவிட   வேண்டும்    என  பக்கத்தான்  ஹரப்பான்   தலைவர்    ஒருவர்   வலியுறுத்தியுள்ளார்.

“பிஎன்னிலிருந்து  வெளியேறிய    கெராக்கான்,  அடுத்து   செய்ய  வேண்டிய   மேலான  காரியம்  அதன்   இரு   செனட்டர்களையும்,   கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக(டிபிகேஎல்)   ஆலோசனை  வாரியத்திலும்   மற்றும்  கூட்டரசு,  மாநில    அளவில்  பல்வேறு   அமைப்புகளிலும்  இடம்பெற்றுள்ள    அதன்   கட்சியினரையும்   பதவி  விலகுமாறு    செய்வதுதான் .

“அவர்கள்   பிஎன்னால்   நியமிக்கப்பட்டவர்கள்.  இப்போது   கட்சி   பிஎன்னிலிருந்து   வெளியேறுவதால்   அவர்களும்  பிஎன்னால்  கொடுக்கப்பட்ட   பதவிகளைக்  கெளரவமான  முறையில்   துறந்து     பழைய  கூட்டணியிலிருந்து   தங்களை  முற்றாக  துண்டித்துக்கொள்ள   வேண்டும்”,  என்று  கெப்போங்   எம்பி  லிம்  லிப்   எங்   இன்று  ஓர்   அறிக்கையில்   கேட்டுக்கொண்டார்.