தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் மற்றுமொரு பேரழிவைச் சந்திக்கவுள்ளதாக எச்சரிக்கை!

போரினால் பேரழிவை சந்தித்த தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் மற்றுமொரு பேரழிவைச் சந்திக்கவுள்ளதாக உலக வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

அதிகரித்துவரும் வெப்பம் மற்றும் காலம் மாறிய மழை வீழ்ச்சி காரணமாக இலங்கை மோசமாக பாதிக்கப்பட இருப்பதாக குறிப்பிடும் உலக வங்கியின் புதிய அறிக்கை அதிலும் மிகவும் மோசமான தாக்கத்தை தமிழர் தாயகமான வட கிழக்கு பிரதேசமே பெரிதும் பாதிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக தெற்காசிய நாடுகளின் வாழும் மக்களின் எதிர்காலம் எவ்வாறான மாற்றத்தை காணவுள்ளது என்பது தொடர்பில் உலக வங்கி புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

125 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் காலநிலை மாற்றம் காரணமாக 2050 ஆம் ஆண்டில் இலங்கைஇ இந்தியாஇ பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக சீர்குழையும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

அதிலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கையில் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களான தமிழர் தாயகமே பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளதாக உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.

இதனால் 2050 இல் இலங்கையின் வாழ்க்கை தர மட்டம் ஏழு வீதத்தால் வீழ்ச்சியடையும் போதுஇ அக்கினி வெயில் கோரத்தாண்டவம் ஆடும் யாழ் மாவட்டம் உட்பட வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் வாழ்க்கை தர மட்டம் 11 வீதத்தால் வீழ்ச்சியடையும் என்று எச்சரித்துள்ளது.

வட மாகாணத்திற்கு அடுத்த படியாக வட மேல் மாகாணமும் அக்கினி வெயிலால் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள உலக வங்கிஇ இந்த மாகாணங்களுக்கு அடுத்த படியாக வட மத்திய மாகாணமும் பாதிப்பை எதிர்நோக்கும் என்று யூன் 28 ஆம் திகதியான இன்றைய தினம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் பேரழிவை சந்தித்துள்ள வட மாகாணத்தில் வாழும் மக்கள் ஏற்கனவே வறுமை காரணமாக மோசடாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ இன்னமும் போரினால் பூர்வீக இடங்களை விட்டு வெளியேறிய மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படாத நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் காலநிலை மாற்றமும் அந்த மக்களை பாதிக்கவுள்ளதால் அவர்களால் இன்னும் பல தசாப்தங்களுக்கு மீள எழும்பமுடியாத நிலை ஏற்படும் என்றும் உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளா விட்டால் சிறிலங்காவிற்கு ஐயாயிரம் கோடி அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதனால் வாழ்க்கைத் தரத்தை வீழ்ச்சியடைவதில் இருந்து மீட்பதற்கு கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள உலக வங்கிஇ விவசாயம் தவிர்ந்த ஏனைய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

-athirvu.in

TAGS: