அறக்கட்டளை ஒன்றிலிருந்து நிதிக் கையாடல் செய்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஓருவரை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணைக்கு அழைக்கும் என எம்ஏசிசி விசாரணை இயக்குனர் சிமி கனி கூறினார்.
அவர் நஜிப் அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக இருந்தவர், அம்னோவின் உயர்த் தலைவர்களில் ஒருவர் என்றவர் சொன்னதாக சினார் ஹரியான் கூறியது.
ஆனால், அவர் அமைச்சரின் பெயரையோ நிதிக் கையாடல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அறக்கட்டளை பற்றியோ விவரம் தெரிவிக்க மறுத்தார்.