ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்க்கும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“அமெரிக்கா மனித உரிமை பேரவையிலிருந்து விலகியுள்ளது. இருப்பினும் யுத்த குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அமெரிக்காவினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் எம்முடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட்டுள்ளது.
இதனால் பொறுப்பு கூறல் விடயத்திலிருந்து ஒருபோதும் இலங்கை அரசாங்கம் தப்பிக்க முடியாது.
இலங்கை தொடர்பில் ஏற்கனவே அரசாங்கத்தின் உயர்மட்டத்திடம் அறிவித்துள்ளோம். ஆகையால் இலங்கை யுத்த குற்றம் தொடர்பாக சரியான தீர்வை வழங்கும் வரை தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்’ என அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.
-tamilcnn.lk