பிகேரின் சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுகைமி ஷாபி,50, இன்று காலை காலமானார்.
அவர் இறந்த செய்தியைப் பொருளாதார விவகார அமைச்சரும் பிகேஆரின் துணைத் தலைவருமான முகம்மட் அஸ்மின் அலி முகநூலில் பதவிட்டிருந்தார்.
“அல் பாத்திஹா. உண்மையான நண்பர் ஒருவரை இழந்து விட்டதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றவர் குறிப்பிட்டிருந்தார்.
அஸ்மின் சிலாங்கூர் மந்திரி புசாராக இருந்தபோது சுகைமி அவருக்கு அரசியல் செயலாளராகப் பணியாற்றினார்.
நடப்பு சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி, ஓர் அறிக்கையில், சுகைமியைப் பொறுப்பான, தொகுதி மக்களால் மிகவும் விரும்பப்படும் சட்டமன்ற உறுப்பினர் என்று வருணித்தார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுகைமி இன்று காலை 11.10 அளவில் சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் காலமானார்.
அவரது உடல் அஸர் தொழுகைக்குப் பின்னர் ஷா ஆலம் செக்ஷன் 21-இல் உள்ள முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்படும்.