பக்கத்தான் ஹரப்பான் சட்டப் பிரதிநிதிகள் அனைவருக்கும் அவர்களின் சொத்து விவரங்களை எம்ஏசிசி-இடம் அறிவிக்க மூன்று மாத அவகசாம் வழங்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு வணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
“சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடமிருந்து உத்தரவு வந்துள்ளது.
“ எம்ஏசிசி ஒரு பாரத்தைத் தயாரித்துக் கொடுக்கும். நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் உள்ள விவரங்கள் எல்லாம் எம்ஏசிசி வலைத்தளத்தில் வெளியிடப்படும். பொதுமக்கள் அதைப் பார்க்கலாம்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் தெரிவித்தது.