அன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டி

அன்வார்  இப்ராகிம்   எதிர்வரும்   பிகேஆர்    கட்சித்   தேர்தலில்    தலைவர்     பதவிக்குப்   போட்டியிடப்   போவதை   உறுதிப்படுத்தினார்.

அன்வார்,     ஓர்     அறிக்கையில்    நடப்புக்   கட்சித்   தலைவரும்   தம்  மனைவியுமான    டாக்டர்  வான்   அசிசா  வான்   இஸ்மாயிலுடனும்    கட்சித்    தலைமையிடமும்    கலந்துபேசிய   பின்னரே    இம்முடிவுக்கு    வந்ததாகக்   கூறினார்.   வான்   அசிசா    இத்தனை    ஆண்டுகளாய்     கட்சித்   தலைவராக   இருந்த    ஆற்றியுள்ள    அரும்பணிகளையும்      அவர்  மறந்துவிடவில்லை.

பிகேஆர்    தேர்தல்கள்  ஆகஸ்ட்   மாதம்    நடைபெறும்.  வேட்பாளர்   நியமன   நாள்  ஜூலை   29.