அதிரடியாக ஆரம்பமாகியுள்ள நாடு கடந்த அரசின் ஐ.பி TV- இனி இலங்கையில் பார்கலாம்

2009ம் ஆண்டுக்குப் பின்னர், பல அமைப்புகள் புலம் பெயர் தேசங்களில் செயல்பட்டு வந்தாலும். அவற்றில் ஒரு சில அமைப்புகள் மட்டுமே தாயகக் கோட்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்புகளே இன்றுவரை பாதை மாறாமல் பயணித்து வருகிறது. பல அமைப்புகள் தாயகம், தன்னாட்சி , என்ற நோக்கை கைவிட்டு. இலங்கை அரசோடு சமாதானம் பேச முற்பட்டு வருகிறார்கள். ஆனால் இன்றுவரை தமிழீழம் ஒன்றே எங்கள் குறிக்கோள் என்று செயல்பட்டு வரும் நாடு கடந்த அரசு, இளைய தலைமுறையினரைக் கவரவும்.

மாறி வரும் புது யுகத்திற்கு ஏற்றவாறு, ஐ.பி தொலைக்காட்சி (IP TV) ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இன்ரர் நெட் வழியாக உங்கள் கம்பியூட்டரில் பார்க்கவும். மேலும் மோபைல் போன் , டாபிலட் போன்ற கையடக்க சாதனத்திலும் இதனை பார்க்க முடியும். இதில் தாயகச் செய்திகள் , உலகச் செய்திகள் மற்றும் ஐரோப்பிய செய்திகளும், கலந்துரையாடல்களும் இடம்பெற உள்ளது. இந்த ஐ.பி- தொலைக்காட்சியை உத்தியோகபூர்வமாக வரும் ஞாயிற்றுக் கிழமை திறக்க லண்டனில் ஏற்பாடாகி உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

லண்டன் ஹரோவில் உள்ள சிவிக் சென்ரரில் வரும் ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இன் நிகழ்வுகள் நடக்கவுள்ளது. இதில் பல தமிழ் ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள் , தேசிய நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொள்ள உள்ளார்கள் என அறியப்படுகிறது.

-athirvu.in

TAGS: