கொழும்பு: ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 18 அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக சட்டவிரோதமாக வருபவர்களை ஆஸ்திரேலியா அரசு ஏற்க மறுத்து வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பேர்த் நகரில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கையைச் சேர்ந்த 18 பேர் நாடு கடத்தப்பட்டனர். 18 அகதிகள், 36 ஆஸ்திரேலியா அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
18 அகதிகளும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.