விடுதலைப்புலிகள் மீளெழுச்சி? யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட குழுவினர், யாழ்ப்பாண ஊடகவியியலாளர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனிடமும் ஒன்றரை மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அன்றைய தினம் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடமும் விசாரனைகள் முன்ணெடுக்கப்படுகின்றது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த கருத்தொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளரும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறு பலரும் கலந்து கொண்டிருக்கதாக விஐயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரைக்கு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஆரவாரம் செய்து கரகோசம் எழுப்பியிருந்தனர்.

இதன்பின்னர் அவரது உரைக்கு தெற்கில் கடுமையான எதிர்ப்புக்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக அவர் சார்ந்த கட்சியினர் உட்பட தென்னிலங்கை கட்சிகள் பலவும் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில் பாராளுமன்றத்திலும் அந்த உரை பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையில் அவர் தனது அமைச்சுப் பதவியையை இராஜினாமா செய்திருந்தார்.

இதன் பின்னரும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளுக்கமைய விஐயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன் தொடராக நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஊடகவியியலாளர்களிடம் கொழும்பில் இருந்து வருகை தந்த திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் விசேட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

விஐயகலாவின் உரை குறித்தான செய்திகளை வெளிக் கொண்டுவந்த ஊடகவியிலாளர்கள், யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து யாழ் கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரிடமும் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதே போன்று இன்னும் பலரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-athirvu.in

TAGS: