யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93, இராணுவ முகாம்கள் 54 மற்றும் விமானப்படை முகாம் 01 என்பன உள்ளடங்கியுள்ளன.
தீவகப் பகுதிகளிலேயே அதிகளவு கடற்படை முகாம்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் 61 முகாம்களை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர்.
குடாநாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளில், சிறிலங்கா கடற்படையினர் 32 முகாம்களைக் கொண்டிருக்கின்றனர்.
சிறிலங்கா கடற்படையினர் 269 ஏக்கர் தனியார் காணிகளையும், 260 ஏக்கர் அரச காணிகளையும் ஆக்கிரமித்து. யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ளனர்.
அதேவேளை, யாழ். குடாநாட்டில் 18 காவல்துறை நிலையங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் சிறிலங்கா காவல்துறையினர் தங்கியிருக்கின்றனர்.
18 இடங்களில் அமைந்துள்ள காவல் நிலையங்களில், 14 இடங்கள், தனியார் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ளன.
காவல் நிலையங்கள், காவல்துறை அதிகாரிகளின் பணியகங்கள், விடுதிகள் ஆகியன தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதால், 200 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர முடியாத நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.