சிங்கள இளைஞர்களின் மனிதாபிமானம்; இதுதான் மனிதநேயத்தின் உச்சகட்டம்!

தமிழ் சிங்களம் என்ற இனவாதங்கள் நாட்டில் பூதாகரமாக வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இன மத பேதங்களை கடந்து நடந்துள்ள சம்பவம் ஒன்று அனைத்து மக்களிடமும் வரவேற்பைப்பெற்று பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் அநாதரவாக விடப்பட்ட ஒருவருடன், இளைஞர்கள் சிலர் மனித நேயத்துடன் நடந்து கொண்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடேசன் என அழைக்கப்படும் குறித்த நபர் மாத்தளையில் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்காரணமாக யாருமே அவரை நெருங்குவது கூட இல்லை என்பதுடன், பைத்தியம் என கூறி அவரை அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பொறியியலாளரான சமரநாயக்கவும் அப்பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து நடேசனை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

நடேசனின் தலைமுடியை வெட்டி அவரை சுத்தப்படுத்தியிருந்ததுடன், அவருக்கு சுத்தமான ஆடைகளையும் அணிவித்துள்ளனர்.

இதன்காரணமாக நடேசன் மீண்டும் தமது பழைய வாழ்க்கை திரும்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த இளைஞர்களின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

காலங்கள் எவ்வளவு வேகமாக மாறினாலும் மனித நேயம் கொண்டவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

-athirvu.in

TAGS: