யாழ்ப்பாணத்தில் பதற்றம்: அதிரடிப்படையினர் குவிப்பு!

யாழ்ப்பாணத்தின் வேறுபட்ட பிரதேசங்களில் இன்று முன்னிரவு பல பாரிய கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல கடைகள் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்த பெருந்தொகையான பணம் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

நல்லூர், முடமாவடி மற்றும் கோண்டாவில் பகுதிகளிலேயே கொள்ளையர்கள் தமது கைவரிசையினைக் காட்டியுள்ளனர்.

முடமாவடியிலும் நல்லூரிலும் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் கோண்டாவிலில் சங்கிலி அறுத்துள்ளனர்.

உடுவில் பகுதியில் சற்று முன்னர் வாள் முனையில் கடை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை வட்டுக்கோட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் ஆசிரியை ஒருவரின் பணப்பை கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டது.

தற்பொழுது யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்திகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு வீதிச் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-athirvu.in

TAGS: