சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செல்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது
ஏனெனில், இந்தியா கூடுதலாகவோ, குறைவாகவோ, அதிகம் தலையிடாத ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பற்றிய கேள்விக்கு அவர், “அது இப்போது பொருத்தமற்றது. அவர்கள் சொந்தப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள்.
எமது பிரச்சினை பற்றி பேசுவதற்கு, தமிழ்நாட்டில் எதுவுமில்லை” என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
-puthinappalakai.net