சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனித எச்சங்கள்..!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று (25) புதன் கிழமை 41 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில்,விசேட சட்ட வைத்திய நிபுனர் தலைமையில் குறித்த பணிகள் இடம் பெற்று வருகின்றது.

தற்போது வரைக்கும் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் சுமார் 52 பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்புக் கருதி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள், மற்றும் எலும்புக்கூடுகள் ஆகியவற்றை வெளியேற்றும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அகழ்வு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: