அந்தமானில் வசிக்கும் ஈழ அகதிகளுக்குள்ள பாரிய பிரட்ச்சனை!

இலங்கையில் இருந்து அந்தமானுக்கு சென்று அகதிகளாக வந்து குடியேறிய 48 இலங்கை தமிழர்கள் குடும்பத்துக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபர் பண்டாரநாயகே மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையில் இருந்து பல தமிழ் குடும்பங்கள் அகதிகளாக வந்து அந்தமான் – நிக்கோபர் தீவில் உள்ள ஷோயல் வளைகுடா பகுதியில் குடியேறிய போது இவர்களுக்கான வாழ்வாதாரமாக இரண்டு ஹெக்டேர் நிலம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1976-ம் ஆண்டில் இலங்கையில் இருந்து அந்தமானுக்கு சென்று அகதிகளாக கட்சல் தீவில் தஞ்சம் அடைந்த 48 தமிழர்கள் குடும்பத்துக்கு வெறும் அரை ஹெக்டேர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது.

இவர்களுக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த குடும்பங்கள் இங்கு வந்து குடியேறி பல வருடங்கள் ஆன நிலையில் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இந்த விவாகரத்தை தற்போது கையில் எடுத்துள்ள அந்தமான் – நிக்கோபார் தீவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான பிஷ்னு பாடா ரே, தற்போது காம்ரோட்டா தீவில் வாழும் இந்த 48 குடும்பங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறித்த செய்தியால் அந்தமானுக்கு சென்று அகதிகளாக கட்சல் தீவில் தஞ்சம் அடைந்த 48 தமிழ் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-athirvu.in

TAGS: