வவுனியா நகரில் பாலியல் வியாபார நடவடிக்கை அதிகரிப்பு வவுனியா மத்திய நகரில் மாத இறுதிப்பகுதிகளில் இளம் பெண்கள் கடைத்தொகுதிகளுக்கு முன்னின்று பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துக்காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து பேருந்து நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கும்போது, அண்மைக்காலங்களாக ஒவ்வொரு மாத இறுதிப்பகுதியில் 20ஆம் திகதிகளுக்கு பின்னர் மத்திய நகரில் இளம் பெண்கள் பாலியல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இப்பகுதிகளில் தரித்து நின்றுவருகின்றனர். நீண்டநேரமாக காத்திருப்பதுடன் தொலைபேசிகளிலும் தொடர்பு கொண்டு நீண்டநேரமாக பேசி வருகின்றனர்.
இவ்வாறு பல பெண்கள் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் இப்பகுதியில் சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றது. இப்பகுதிக்கு வரும் பெரும்பான்மை இனத்தவர்கள் சிவில் உடையில் அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வியாபார நிலையங்களுக்கு பொதுமக்களின் வரவு குறைந்து காணப்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை எவையும் பொலிசார், நகரசபையினரால் இடம்பெறவில்லை.
இவ்வாறு கலாச்சார சீர்கேடாக மாறிவரும் இந்நிலையிலிருந்து மத்திய நகரை மீட்டுத்தருமாறு மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நகரசபையினால் வவுனியாவிலிருந்த மசாஜ் நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் தற்போது காலச்சார சீர்கேடுகள் இடம்பெறும் நடவடிக்கையினைக்கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் ஆக்கபூர்வாக இடம்பெறவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
-eelamnews.co.uk