தேசிய முன்னணி(பிஎன்)யின் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் வேட்பாளர் லொக்மான் நூர் ஆடமை ஆதரிக்கிறார்களா என்பதை வெளியில் சொல்லாதிருக்கும் மசீசவும் மஇகாவும் கட்சியை “இழுத்து மூடிவிடலாம்” என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
இடைத் தேர்தலில் லொக்மான் வெற்றிபெறுவதை அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிவிக்குமாறு இதுவரை மூன்று முறை கேட்டுவிட்டதாக லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“இப்போது பாஸ் அதிகாரப்பூர்வமாகவே லொக்மானுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில் ….மஇகாவிடமும் மசீசவிடமும் நான்காவது முறையாகவும் இறுதி முறையாகவும் கேட்கிறேன்.
“இன்னும் ஆறு நாளில், அவர்கள் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் லொக்மான் வெற்றி பெறுவதை விரும்புகிறார்களா, தோல்வியுறுவதை விரும்புகிறார்களா”, என்று லிம் வினவினார்.
இதற்கு விடையளிக்க முடியாவிட்டால் மசீச செப்டம்பர் 8-இல் பலாகோங் இடைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் லிம் கூறினார்.