ஜேர்மனி அரசினால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி யார் என்ற தகவல் வெளியானது!

ஜேர்மனி அரசினால் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் 36 வயதுடைய ஈழத் தமிழர் பீ.சிவதீபன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமொன்றில் உறுப்பினராக இருந்தமை மற்றும் போர் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஜேர்மனியின் டுசுல்டோப் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் ஓகஸ்ட் முதலாம் திகதி இந்த ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

ஜேர்மனியில் நடைமுறையிலுள்ள தனிநபர்களின் தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைய ஜேர்மன் தலைமை வழக்குத் தொடுநர் கைதுசெய்யப்பட்டுள்ள ஈழத் தமிழரின் முழுமையான விபரங்களை கூற மறுத்துவிட்டார்.

எனினும் கைதுசெய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர் 36 வயதான பீ.சிவதீபன் என மாத்திரம் அடையாளப்படுத்தியிருக்கின்றார்.

கைதுசெய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளதுடன், 2008 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் 16 பேரை பிடித்து படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்ததாகவும் ஜேர்மன் வழக்குத் தொடுநர் தெரிவித்திருக்கின்றார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: