அன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்

 

பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாரத்தை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கட்சியின் தேர்தல் குழுவிற்கு இன்று காலை மணி 11.15 க்கு அனுப்பியுள்ளார்.

டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அன்வாரை கட்சியின் தலைவர் பதவிக்கு முன்மொழிய, கட்சியின் வியூக இயக்குனர் சிம் ஸி ஸிங் வழிமொழிந்துள்ளார்.

அன்வாரின் நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டதை கட்சியின் தேர்தல் குழுவின் செயலாளர் இஸ்மாயில் யுசோப் அறிவித்தார்.

கட்சியின் தேர்தல் நியமன நடவடிக்கைகள் இன்று காலை மணி 10.00 அளவில், பெட்டாலிங் ஜெயா பிகேஆர் தலைமையகத்தில் தொடங்கியது.