அஸ்மின்: சிங்கப்பூருடன் எச்எஸ்ஆர்மீதான பேச்சுகள் இம்மாதம்

கோலாலும்பூர்- சிங்கப்பூர்   அதிவேக  இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம்  மீதான  இருதரப்புப்  பேச்சு   இம்மாதம்   நடைபெறலாம்   என்று   பொருளாதார  அமைச்சர்    முகம்மட்  அஸ்மின்   அலி   இன்று   கூறினார்.

“நேற்று  (உள்துறை  அமைச்சர்)  முகைதின்  யாசினைப்   பார்ப்பதற்காக    அங்கு   சென்றிருந்தேன்.  அப்போது   சிங்கப்பூர்     உயர்   அதிகாரிகள்   சிலரைச்   சந்தித்து   எச்எஸ்ஆர்   பற்றிப்  பேசினேன்.  அச்சந்திப்பு  பயனுள்ளதாக   இருந்தது.

“அது  பற்றி  அறிக்கை  வெளியிடுவேன்”,  என  இன்று   நாடாளுமன்ற   வளாகத்தில்    சந்தித்த   செய்தியாளர்களிடம்   அஸ்மின்  கூறினார்.

முகைதின்  அறுவை  சிகிச்சைக்காக    சிங்கப்பூர்    சென்றார்.  அறுவைச்  சிகிச்சை   முடிந்து  இப்போது   குணமடைந்து   வருகிறார்..