பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் தன் தந்தை அன்வார் இப்ராகிமுக்காக தன்னுடைய தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
“பெர்மாத்தாங் பாவ் என்றென்றும் என் பாசத்துக்குரிய தொகுதி.
“என் தவணைக் காலம் முடியும்வரை இதை விடப்போவதில்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
முன்னதாக, துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தம் கணவருக்காக பாண்டான் தொகுதியைத் துறக்கப்போவதில்லை என்றார்.
ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு “திட்டவட்டமாக இல்லை” என்றுரைத்தார்.
கடந்த வாரம் சுங்கை கண்டிஸில் முகம்மட் ஸவாவி அஹமட் முகானிக்காக பரப்புரையில் ஈடுபட்ட அன்வார் விரைவில் நாடாளுமன்றத்துக்குத் திரும்பி வரப்போவதாகக் கோடி காட்டினார்.