அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ரிம230 மில்லியன் சொத்து வைத்திருப்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை எனச் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங் கூறினார்.
ஆதாரம் எதுவும் இருக்குமானால் எம்ஏசிசி அவ்விவகாரத்தை ஆராயும் என லியு நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் கூறினார்.
ஜாஹிட் பெரும் சொத்துக்குச் சொந்தக்காரர் என்று கூறப்பட்டிருப்பதை அரசாங்கம் ஆராயுமா என்று புக்கிட் குளுகோர் எம்பி ராம்கர்ப்பால் சிங் கேட்டிருந்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.