சட்டவிரோதமாக படகில் வெளிநாடு செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் ஆழ்கடலில் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முற்பட்ட 21 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையினர் ஆழ்கடலில் கைது செய்துள்ளனர்.

சிலாபத்தில் இருந்து 117 கடல் மைல் தொலைவில் நேற்று மாலை இழுவைப்படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் இடைமறித்தன.

இதையடுத்து, அந்த இழுவைப்படகு சட்டவிரோத குடியேற்ற வாசிகளுடன், சிறிலங்கா கடற்படையினரால், இன்று காலை கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 19 ஆண்களும், 2 பெண்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் 17 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் கொழும்பு துறைமுக காவல்துறையிடம் கையளிக்கப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் எந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தனர் என்று இன்னமும் தெரியவரவில்லை.

-puthinappalakai.net

TAGS: