ஜாஹிட்: நாங்கள் எதற்காக எஸ்எஸ்டி சட்டவரைவுகளை ஆதரிக்க வேண்டும்

பிஎன்   நாடாளுமன்ற    உறுப்பினர்கள்  மக்களவையில்   எதற்காக  எஸ்எஸ்டி  சட்டவரைவுகளை  ஆதரிக்க  வேண்டும்   என்று   கேட்கிறா  எதிரணித்   தலைவர்    அகமட்  ஜாஹிட்  ஹமிடி.

ஜாஹிட்  ஹமிடியிடம்   பிஎன்  எம்பிகள்    2018 விற்பனை  வரி   சட்டவரைவையும்   2018  சேவை   வரி   சட்டவரைவையும்    ஆதரிப்பார்களா   என்று   கேட்டதற்கு,  “எதற்கு   ஆதரிக்க  வேண்டும்?”  என்று   திருப்பிக்  கேட்டார்.

பிஎன்   செனட்டர்கள்   பெரும்பான்மையாக  உள்ள    மேலவையில்   அந்தச்  சட்ட   வரைவுகளுக்கு   ஆதரவு   கிடைக்குமா   என்றும்   அவரிடம்  மீண்டும் வினவப்பட்டது.

“முதலில்  (சட்டவரைவுகளைத்)   தாக்கல்   செய்யட்டும்,  பார்ப்போம்”,  என்றார்.

2014  பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)க்குப்   பதிலாகக்   கொண்டுவரப்படும்    அவ்விரு  சட்டவரைவுகளும்  கடந்த    செவ்வாய்க்கிழமை   முதல்   வாசிப்புக்கு  வந்தன.