14வது பொதுத் தேர்தல் நிதியில் ரிம3.5 மில்லியனைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிரதமர்துறையின் 17 பாதுகாவலர்களை எம் ஏசிசி கைது செய்துள்ளது.
நேற்று கைதான 17 பேரும் இன்று காலை விசாரணைக்காக 5 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஓர் உயர் பாதுகாப்பு அதிகாரியும் 16 பாதுகாவலர்களும் அடங்கிய அந்த 17 பேரும், தேர்தல் நிதியைச் சொந்தத்துக்குப் பயன்படுத்திக் கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
31வயதுக்கும் 51 வயதுக்குமிடைப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று பிற்பகல் மணி 2.45க்கும் 3.15க்குமிடையில் புத்ரா ஜெயாவில் எம்ஏசிசி தலைமையகத்தில் தனித் தனியே கைது செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
எம்ஏசிசி துணை ஆணையர்( நடவடிக்கைகள்) அஸாம் பாகி கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.
கைதானவர்களிடமிருந்து ரிம840,700 ரொக்கமும் ரிம90,000 மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.