4 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 1,080.55 கோடி ரூபாவை வழங்கியது இந்தியா

கடந்த நான்கு ஆண்டுகளில் 1,080.55 கோடி ரூபாவை (இந்திய நாணயம்) அபிவிருத்தி உதவியாக சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள ஆறு அண்டை நாடுகளுக்கு கடந்த நான்கு நிதியாண்டுகளில் இந்தியா வழங்கியுள்ள அபிவிருத்தி நிதி தொடர்பான புள்ளி விபரங்களை இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று ராஜ்ய சபையில் எழுத்து மூலம் சமர்ப்பித்தார்.

இதற்கமைய, 2014-15 நிதியாண்டு தொடக்கம், 2017-18 நிதியாண்டு வரையான நான்கு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, சிறிலங்கா ஆகிய ஆறு நாடுகளுக்கும், 21,100 கோடி ரூபா அபிவிருத்தி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பூட்டானுக்கு, 15,680.97 கோடி ரூபாவும்,  ஆப்கானிஸ்தானுக்கு, 2,232.94 கோடி ரூபாவும், நேபாளத்துக்கு 1,322.54 கோடி ரூபாவும், சிறிலங்காவுக்கு  1,080.55 கோடி ரூபாவும், பங்களாதேசுக்கு, 514.13 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு, 270.39 கோடி ரூபாவும், அபிவிருத்தி உதவியாக வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: