பலாகோங் இடைத்தேர்தல்: டிஎபி வேட்பாளர் யார் என்பது இன்னும் இரண்டொரு நாள்களில் முடிவு செய்யப்படும்

டிஎபியின் மத்தியச் செயற்குழு இன்னும் இரண்டொரு நாள்களில் பலாகோங் இடைத்தேர்தலுக்கான அதன் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் என்று அதன் தேசியத் தலைவர் டான் கோக் வை கூறினார்.

அந்தச் சட்டமன்ற இருக்கை அதன் உறுப்பினர் எடி இங் ஒரு விபத்தில் மரணமுற்றதைத் தொடர்ந்து காலியாயிற்று.

மே 9, 14 ஆவது பொதுத்தேர்தலில், டிஎபியின் இங், பிஎன்னின் லிம் சின் வா மற்றும் பாஸ்சின் முகமட் இப்ராகிம் காஸாலி ஆகியோரை 35,538 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் ஆகஸ்ட் 18. வாக்களிப்பு நாள் செப்டெம்பர் 8.