முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் வெற்றி!

முல்லைத்தீவு மாவட்;டத்தில் தடைசெய்யப்;பட்டதொழில்களை தடுத்து நிறுத்தக்கோரி 10வது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரியும் 5000 க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25பேருக்கு வழங்கப்பட்டுள்ள சுருக்குவலை அனுமதியினை இரத்துசெய்யக்கோரியும் கடந்த 2ம்திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு முன்பாக தொடர் கனயீரப்புப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இன்று (12-08-2018)முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த கடற்தொழில்; நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்திஅமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா அவர்கள் முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்;தில் மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில் மீனவ அமைப்பினருடன் இணைந்து ஆராய்ந்ததன் பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் மதத்தலைவர்களைச் சந்;தித்து தடைசெய்யப்பட்ட தொழில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுருக்குவலை அனுமதித்தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அதுவரையில் சுருக்குவலை அனுமதி அனைத்தையும் தற்காலிகமாக இரத்துசெய்வதாகவும் வழங்கிய வாக்குறுதியையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

-http://eelamnews.co.uk

TAGS: