வீரமுனைப் படுகொலைகளின் 28 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான  அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்முறைகளினால், வீரமுனையும் அதனருகே இருந்த, வீரச்சோலை, மல்​லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாபிட்டி, சொறிக்கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பலர், தங்களது குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோவில் மற்றும் வீரமுனை இராமகிருஷ்ண மிசனரி பாடாசாலையிலும் தங்கியிருந்தனர்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இவர்கள் அங்கு தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 ஆம் திகதி, இலங்கை இராணுவத்தினாராலும், ஊர்காவல்படை கும்பல்களாலும், நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள், துப்பாக்கியால் சுடப்பட்டும் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 55 பேரும் இந்த வெறிச் செயலால் உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை இதன்போது கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-tamilmirror.lk

TAGS: