ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ரகங்களுக்கும் மேலான கோதுமைகளின் மரபணுக்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் உள்ளது என்பதை காட்டும் உலக வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
எந்த மரபணு கொண்ட கோதுமை எந்த இடத்தில் விளைகிறது எனும் தகவலை காட்டும் இந்த வரைபடம் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் ஒட்டுரக கோதுமை வகைகளை உருவாக்க முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனினும், உலகில் போதுமான அளவு உணவு உள்ளது. அவற்றை முறையாக விநியோகம் செய்தாலே பசியைப் போக்க முடியும் என மரபணு மாற்றத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். -BBC_Tamil