தமிழ் தலைமை முஸ்லிம் மக்களின் இன ஆக்கிரமிப்பைப் பற்றி வாய் மூடி மௌனிப்பு! முன்னாள் பிரதி அமைச்சர்

இன்று வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவு, மன்னார் வவுனியா மாவட்டங்களில் பாரிய சூராவளி பயணத்தை மேற்கொண்டு மக்களின் குறைநிறைகளை அறிந்து வரகின்றேன். முக்கியமாக இனவாத அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தமது வாக்குகளுக்காக இனரீதியான ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது என ஊடகங்களுக்கு முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது,

தேசிய கட்சிகளிலே பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு தேவைப்படும் வாக்குகளுக்காக முஸ்லிம் மக்களை பிற மாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து வவுனியாவில் குடியேற்றுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் அல்ல.

ஆனால் பலவந்தமாக மக்களை குடியேற்றுவதை அனுமதிப்பவனும் அல்ல. வன்னி மாவட்டத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த தேர்தலில் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

மாறாக எதிர்வரும் தேர்தலுக்காக தங்கள் இனத்தவர்களை வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வந்து வவுனியா மாவட்டத்தில் குடியேற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது இனத்தவர்களுக்கு சேவையாற்றுவது சகஜமான விடயமாகும். அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தமது இனத்தவர்களின் விகிதாசாரத்தை அதிகரிப்பதன் ஊடாக தமது அரசியல் நிலையினை உறுதி செய்து கொள்ள முயற்சிப்பது தவறான விடயமாகும்.

தலைமன்னார் பியர் பகுதியிலும் பெரிய சாலமன் பகுதி போன்ற இடங்களில் முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வீட்டு திட்டத்தின் ஊடாக பல வீடுகள் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழ் கிராமங்களில் வீட்டுத் திட்டம் சரியாக அமுல்படுத்தப்படுவதில்லை. முஸ்லிம் கிராமங்களில் கட்டப்பட்ட பல வீடுகள் குடியிருப்பாளர்கள் இன்றி மூடி வைக்கப்பட்டுள்ளது.

வன்னி மண் தமிழ் மக்களின் கைகளிலிருந்து சிறிது சிறிதாக பறிபோய்க்கொண்டிருக்கின்றது. இதனை தடுத்து நிறுத்த வன்னி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித அக்கறையும் இன்றி இருக்கின்றனர். வவுனியா நகர் வியாபாரம் முஸ்லிம் வியாபாரிகள் வசம் இவ் அமைச்சர்களின் ஊடாக சென்றடைந்துள்ளது.

சிங்கள மக்களின் இன ஆக்கிரமிப்பைப் பற்றி பேசி தமது வாக்கு வங்கிகளை பெருக்கிக் கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களின் இன ஆக்கிரமிப்பைப் பற்றி வாய் மூடி மௌனித்துள்ளார்கள்.

வன்னி மாவட்டத்தில் எனது அரசியல் பிரவேசம் பிரதேச பேதமின்றி நலிவடைந்திருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்குமான சேவையானதாகவே இருக்கும். அதே நேரம் எவ்வித காரணத்திற்காகவும் முஸ்லிம் மக்களின் இன ஆக்கிரமிப்பு உருவாவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். வேறு மாவட்டத்திலிருந்து அழைத்து வரும் முஸ்லிம் மக்கள் அரசாங்க வீடுகளைப் பெற்றுக் கொண்டு வன்னி மாவட்ட வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொண்டு வீட்டை மூடி வைத்து விட்டு தமது சொந்த மாவட்டத்தில் சென்று வசிக்கின்றார்கள். ஆனால் வன்னி மாவட்டத்தைச் சார்ந்த எனது தமிழ் மக்களுக்கு முறையான வீட்டுத் திட்டம் கிடைக்கப்பெறுவதில்லை.

இப்படியான திட்டமிட்ட சதியினை வன்னி மாவட்ட தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கு எவ்வித எதிரப்பும் காட்டாமல் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத்தனத்தையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

-http://eelamnews.co.uk

TAGS: