முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கடந்த ஜூன் மாதம் 22ம் திகதி காலை கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையிலேயே வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-athirvu.in