பாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனர்களுக்கான 200 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான உதவியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

டிரம்பின் வழிகாட்டலின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பணமானது வேறு எங்கேனும் அதிக முன்னுரிமை தேவைப்படும் திட்டங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளதாக கூறியுள்ளார்.

டிரம்பின் நிர்வாகம் ”அரசியல் ஆயுதமாக ஒரு மலிவான அச்சுறுத்தலை பயன்படுத்துவதாக” ஒரு மூத்த பாலத்தீன அதிகாரியான ஹனான் அஷ்ராவி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக டிரம்ப் அறிவித்ததில் இருந்து அமெரிக்காவின் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பாலத்தீன தலைமை நிராகரித்து வருகிறது. -BBC_Tamil