கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் குடும்பங்களிடம் கப்பம் கோரும் ஒரு வலையமைப்பு எவ்வாறு சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் இயங்கியது என்ற அதிர்ச்சி தரவுகள் இப்போது வெளிவருகின்றன.
2008 – 2009 ஆண்டுகளில் கொழும்பு தமிழ் குடும்பங்களிடம் கப்பம் கோருவதை இந்த கடத்தல் குழுவின் சூத்திரதாரியான லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிதான் அண்மையில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரும் தற்செயலாகத்தான் கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா புலனாயுவுத்தரப்பில் கூறப்படுகிறது. சிறிலங்கா குற்றவியல் பிரிவு அதிகாரியான சி.ஐ.டி நிஷாந்த சில்வா என்பவர் கொழும்புகோட்டை பகுதியில் உள்ள லோட்டஸ் வீதியால் பயணித்தபோது சாதாரண ஒரு தொழிலாளியைப் போல றபர் காலணிகளை அணிந்து தாடி வைத்திருந்த ஒருவரை வீதியால் சென்றதை கண்டாராம்.
அந்தநபரை கண்டதும் சி.ஐ.டி நிஷாந்த சில்வா, ஏதோ பொறி தட்டியதால் அவரை இடைமறிந்த விசாரித்தார். அப்போது லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தனது உண்மையான அடையாளத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.
இதற்குப்பின்னராக விசாரணைகளில் ஹெட்டியாராச்சி தொம்பேயில் உள்ள தோட்டம் ஒன்றில் பொல்வத்த கலகே அசோகா என்கிற பெயரில காவலாளியா வேலை செய்தமை அம்;பலமானது. இவரிடம் களனி விலாசத்தைக் கொண்ட இன்னொரு போலி அடையாள அட்டையையும் இருந்தது.
மகிந்த ஆட்சியின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரணாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலராக கடமையாற்றியவேளைதான் ஹெட்டியாராச்சி உயர்மட்டத்தின் ஆசீர்வாதத்துடன் கடத்தல் குழு ஒன்றின் தலைவராகவும் இருந்தார்.
இவரதுகுழுதான் கம்பம் கோரும் வகையில் கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று கொழும்பிலுள்ள ‘பிட்டு பம்புவ’ கடற்படைச் சிறையில் தடுத்து வைத்தது. அதன் பின்னர் பேரங்கள் படியாததால் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவர்களை கொண்டுசென்று அங்குள்ள இடத்தில் வைத்துக் கொலை செய்ததாகதெரியவருகிறது..
இந்தக்குழு கடத்திய தமிழர்களின் எண்ணிக்கை 11 என கூறப்பட்டாலும் உண்மையான தொகை அதனைவிட அதிகமென கூறப்படுகிறது.
சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ரவீந்திர விஜேகுணரட்ன லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை டோராபடகு ஒன்றில் நாட்டை விட்டுத் தப்பிச்செல்ல உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான விசாரணையில் இருந்து பாதுகாப்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் உயர்மட்டம் முயற்சி செய்தமை அம்பலப்பட்டுள்ளது.
ஹெட்டியாராச்சி தொடர்பான வழக்கு அடுத்தவாரம் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in