இறப்பதற்கு ஒரு நாள் முன்னரும் புலிகளுக்கு உதவ துடித்த எம்ஜிஆர்.! வெளியான புதிய தகவல்..

எம்ஜிஆர் அதிமுகவின் நிறுவன தலைவர், கவர்ந்திழுக்கும் நடிகர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், இலட்சோப லட்சம் ரத்தத்தின் ரத்தத்தங்களின் தலைவன் இவை எல்லாவற்றையும் கடந்து அவர் இன்னமும் எண்ணற்ற ஏழை ; எளியோர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்க காரணம் அவர் சிறந்த மாந்தநேயர். தான் சினிமாவின் மூலம் ஈட்டியதை எண்ணற்றோருக்கு ஈந்து மகிழ்ந்த பெருந்தகையாளன். அத்தகைய எம்ஜிஆரின் இன்னுமோர் அழுத்தமான அடையாளம் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்தந்திய நண்பர்.

ஆம், பாயும் புலி பண்டார வன்னியன் ஆண்ட தேசத்தில் தமது தார்மீக உரிமையான ஈழம் கேட்டு போராடிய புலிகளை அவர் தீவிரமாக ஆதரிக்கவே செய்தார். மேலும், அவர் ஈழத்து மக்களின் மேல் மாறாத அன்பு கொண்டிருந்தார். அது எந்த அளவுக்கு என்றால் புலிகளின் போராட்டத்திற்காக ரூ.7 கோடி எந்த நெருக்குதலுக்கும் பணியாமல் வழங்கியது தொடங்கி தனது உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்பு கூட சுமார் 40 லட்சத்தினை புலித்தலைமைக்கு அளித்ததுவரை.

நிதியுதவி அளித்தது கடந்து அவர் ஈழத்தின் தார்மீக ஆதரவாளராக இருந்ததுவே புலித்தலைமைக்கு நிச்சயம் ஓர் நம்பிக்கையினை அளித்திருக்கும் என்றால் அதில் மிகையில்லை. அப்படியான எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி அவர் உடல்நலம் குன்றி இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் புலிகளுக்கு உதவிட முனைந்தது வழமையாக சந்திக்கும் இயக்கத்தை அந்த குறிப்பிட்ட நபருக்கு சொல்லியனுப்பியுள்ளார்.

ஆனால், அவர் அப்போது வெளியூரில் இருக்கவே அந்த சந்திப்பு நடவாமல் போயுள்ளது. இந்த தகவலை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அவர்களும் உறுதி செய்துள்ளார்.

-athirvu.in

TAGS: