வடக்கு கிழக்கிலே தமிழரின் பாரம்பரிய பூர்வீகச் சொத்துக்கள் காலம்காலமாக தென்னிலங்கையர்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளன.
அதன் தாக்கம் அண்மைக்காலத்தில் அதிகரித்த தன்மையினையே நாம் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தமிழரின் பூர்வீக நிலங்கள் சுவீகரிப்பு என்ற பேரில் சூறையாடப்படுவதும் கடல் வளங்கள் அத்துமீறிய ஆக்கிரமிப்பினால் கவரப்படுவதும் அன்றாடம் காணக்கூடிய பிரச்சினையாக இருந்துவருகின்றது.
குறிப்பாக மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட தொழில்களையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள வடகிழக்குத் தமிழ் மக்கள் இவ்வாறான ஆக்கிரமிப்புக்களின் மத்தியில் சொல்லெணாத் துயரத்தையே அனுபவித்துவருகின்றனர்.
-athirvu.in