மகா­வலி ‘எல்’ வல­யத்தில் திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றங்கள்: ஆ­தா­ரங்கள் உண்டு!

வடக்கு முல்­லைத்­தீவில் மகா­வலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. இதற்­கான ஆதா­ரங்­கள்­ தன்­னிடம் இருக் கின்­றன என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சேன தலை­மையில் நேற்று இடம்­பெற்ற வடக்கு கிழக்கு தொடர்­பான விசேட செய­லணி கூட்­டத்­தில்­க­ருத்து வெளி­யிட்ட ஜனா­தி­ப­திஇ முல்­லை­தீவூ மகா­வலி எல் வல­யத்தில் எவ்­வி­த­மான சிங்­கள குடி­யேற்­றங்­களும் இடம்­பெ­ற­வில்லை என தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் இது தொடர்­பாக வட மாகாண முத­ல­மைச்­சர்­நேற்று ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வ­து, இன்று மிக முக்­கிய செய­ல­மர்வூக் கூட்டம் எனது கைதடி செய­ல­கத்தில் இருப்­பதால் என்னால் மக்­க­ளுடன் சேர முடி­யா­மைக்கு வருந்­து­கின்றேன். எனது கருத்­துக்­களை இந்த குறுந் தகவல் அறிக்கை ஊடாகத் தெரி­யப்­ப­டுத்­து­கின்றேன்.

இலங்­கை­யில்இ தங்­க­ளு­டைய பாரம்­ப­ரிய பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­குஇ கிழக்கு மாகா­ணங்கள் பெரும்­பான்மை இன மக்­களால் கப­ளீ­கரம் செய்­யப்­ப­டு­வ­தனை எமது தமிழ் மக்கள் அச்­சத்­து­ட­னேயே நோக்கி வந்­துள்­ளார்கள். தமது இருப்பைத் தொடர்ந்தும் தக்க வைக்க முடி­யூமா என்ற அச்சம் தமிழ் மக்கள் மன­திலே ஆண்­டாண்டு கால­மாக இருந்து வந்­துள்­ளது.

கல்­ஓயா திட்­டத்தின் மூலம் கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் பிர­தே­சங்கள் அப­க­ரிக்­கப்­பட்டு இனப்­ப­ரம்பல் மாற்­றி­ய­மை­யக்­கப்­பட்­டமை முதலில் அச்­சத்தை உத­ய­மாக்­கி­யது. அதன் பின் தொடர்ந்து கிழக்கு மாகா­ணத்­திலும் தற்­போது வட­மா­கா­ணத்­திலும் நடை­பெறும் அப­க­ரிப்­புக்கள் அச்­சத்தை உச்­ச­மாக்­கி­யூள்­ளன. இத­ன­டிப்­ப­டை­யி­லேதான் தமிழ் அர­சியல் தலை­வர்கள் அரச அனு­ச­ர­ணை­யூடன் நடை­பெ­று­கின்ற பெரும்­பான்­மை­யின குடி­யேற்­றங்­களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்­கை­யினை நீண்­ட­கா­ல­மாக வலி­யூ­றுத்தி வரு­கின்­றார்கள். அர­சாங்­கத்­துடன் ஏற்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் யாவூம் வடக்கு கிழக்கை எமது பாரம்­ப­ரிய தாய­க­மாக ஏற்றுக் கொண்­டுள்­ளன.

தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்து வந்த பகு­தி­களில் மொழி உரி­மை­யூடன் அச்­ச­மின்றி வாழக்­கூ­டிய தமது இருப்­புக்­களை உறு­திப்­ப­டுத்தி கொள்­வது எமது முக்­கி­ய­மான அர­சியற் கோரிக்­கை­யாக முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன. 1957ம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட பண்டா – செல்வா ஒப்­பந்­தத்­தி­லும்இ 1965ம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட டட்லி சேன­நா­யக்க – செல்­வ­நா­யகம் ஒப்­பந்­தத்தின் போதும் தமி­ழர்கள் வாழும் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற பெரும்­பான்­மை­யின குடி­யேற்­றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டது. அதனைத் தவிர்க்க வரை­மு­றைகள் தௌpவூ­ப­டுத்­தப்­பட்­டன. உதா­ர­ண­மா­க

தமி­ழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பகு­தி­களில் குடி­யேற்ற வாசி­களைத் தெரிவூ செய்யூம் போது அந்­தந்த மாவட்­டங்­களில் வாழும் மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும்.

அதற்கு மேலும் குடி­யேற்­ற­வா­சிகள் தேவைப்­படும் இடத்து அந்­தந்த மாகா­ணங்­களில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும்.

அதற்கு மேலும் குடி­யேற்­ற­வா­சி­களைத் தெரிவூ செய்யூம் போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளிற்கு வெளியே வசிக்கும் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்டும் என்­பது போன்ற ஏற்­பா­டுகள் மிகத் தௌpவாக எடுத்­துக்­கூ­றப்­பட்­டுள்­ளன.

மேற் கூறிய 02 ஒப்­பந்­தங்­களும் சிங்­களத் தலை­வர்­களால் ஒரு­த­லைப்­பட்­ச­மாக கைவி­டப்­பட்­ட­மையால் இந்தப் பிரச்­சனை தொடர்ந்தும் இருந்­து­கொண்­டே­யி­ருக்­கின்­றது.

அரச ஆத­ர­வி­லான குடி­யேற்றத் திட்­டங்­களை மேற்­கொள்­ளும்­போது இலங்­கையின் மொத்தக் குடிப்­ப­ரம்­பலில் 12 வீதத்தை மட்டும் தம­தாக்கிக் கொண்­டுள்ள தமிழ் பேசும் மக்கள் அவர்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் ஏனைய மொழி பேசு­கின்ற மக்­களைக் குடி­யேற்­று­வதன் மூலம் தமிழ் மக்­களின் உரி­மைகள் அவர்கள் வாழு­கின்ற பிர­தே­சத்­தி­லேயே இல்­லாமல் ஆக்­கப்­ப­டு­கின்­றன. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ்ப் பேசும் மக்­களே பெரும்­பான்­மை­யினர். சரித்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்­களே இவ் விரு­மா­கா­ணங்கள் தற்­போது இருக்கும் இடங்­களில் பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்து வந்­துள்­ளார்கள்.

இன்று இலங்­கையில் காடு­களில் வசிக்கும் பறவை இனங்­க­ளுக்­கும்இ மிரு­கங்­க­ளுக்கும் தனித்­த­னி­யாக சர­ணா­ல­யங்கள் அமைக்­கப்­பட்டு அவற்றின் வாழும் முறை­மைகள் குழப்­ப­ம­டை­யாத விதத்தில் அவை தமது இயல்­பான முறை­யி­லேயே வாழ்­வ­தற்­கு­ரிய ஒழுங்­குகள் செய்­யப்­பட்டு வரு­வது மட்­டு­மன்றி சர­ணா­ல­யங்­க­ளுக்கு அருகே மிகை ஒலி­களை எழுப்­பு­வது கூட சட்­டத்­திற்கு முர­ணா­னது என்று பல சட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பௌத்த மதம் ஜீவ­கா­ருண்­யத்தை வலி­யூ­றுத்தும் மத­மாகும்.

ஆனால் இலங்­கையின் ப+ர்வீகக் குடி­க­ளான தமிழ்ப் பேசும் மக்­களின் இருப்பை உறுதி செய்து அவர்­களின் இயல்­பான வாழ்க்கை முறை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு ஏற்ற ஒழுங்­கு­களை மேற்­கொண்டு அவர்­களை ஐக்­கிய இலங்­கைக்குள் சுய­மாக வாழும் ஒரு பிரி­வி­ன­ராக ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய அர­சியல் முன்­னெ­டுப்­புக்கள்

மேற்­கொள்­ளப்­ப­டா­தது விந்­தைக்­கு­ரி­யது. அதற்கு மாறாக அவர்­களின் ப+ர்வீகப் பகு­தி­களைப் பறித்­தெ­டுப்­ப­தற்கே தொடர்ந்து வந்த அர­சாங்­கங்கள் முயன்­றுள்­ளன.

இத­னால்த்தான் 1987ம் ஆண்டு இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது 13ஆவது அர­சியல் அமைப்புத் திருத்தம் வரை­யப்­பட்டு காணி சம்­பந்­த­மான பல கலந்­து­ரை­யா­டல்கள் அப்­போ­தைய தமிழ்த் தலை­வர்­களால் இலங்கை அர­சாங்­கத்­துடன் மேற்­கொள்­ளப்­பட்­டன.

மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை சட்­டத்தின் கீழ் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான குடி­யேற்­ற­வா­சிகள் கிழக்கு மாகா­ணத்­தில ; ஜி வலயம் வரை குடி­யேற்­றப்­பட்ட போது அதில் தமிழ் முஸ்லீம் மக்கள் அற்ப தொகை­யி­னரே பய­னா­ளி­க­ளாக சேர்க்­கப்­பட்­டனர். இந்த நட­வ­டிக்கை இனப்­ப­ரம்­பலில் பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அதனைக் கருத்தில் கொண்டு மகா­வலி அபி­வி­ருத்தித் திட்டம் போன்ற மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான பாரிய திட்­டங்­களில் முழு இலங்­கையின் இன­வி­கி­தா­சார அடிப்­ப­டையில் குடி­யேற்­ற­வா­சிகள் தெரி­வூ­செய்­யப்­பட வேண்டும் என ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. எனினும் ஜி வலயம் வரை குடி­யேற்­றப்­பட்ட குடி­யேற்­ற­வா­சி­களில் அற்ப தொகை­யி­னரே தமிழ் முஸ்லீம் இனங்­களைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தார்கள். இன­வி­கி­தா­சா­ரத்­தின்­படி அவர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய தொகையை எதிர்­வரும் திட்­டங்­களில் ஈடு­செய்ய வேண்டும் என்ற முன்­மொ­ழிவூ அப்­போ­தைய மகா­வலி அபி­வி­ருத்தி அமைச்சர் காமினி திஸா­நா­யக்க அவர்­களால் முன்­மொ­ழி­யப்­பட்­டது. அதா­வது சிறு­பான்­மை­யி­னர்கள் தங்­க­ளுக்­கு­ரிய பங்கைப் பெற்­றுக்­கொள்ளும் வரை ஏற்­க­னவே தமது விகி­தா­சா­ரத்­திற்கு மேல­தி­க­மாக காணி­களைப் பெற்றுக் கொண்ட பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு காணி வழங்­கு­வது நிறுத்­தப்­பட வேண்டும் என்றும் காணிகள் வழங்­கப்­ப­டாத தமிழ் முஸ்லீம் இன மக்­க­ளுக்கு காணிகள் வழங்­கப்­பட வேண்டும் என்றும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் கிழக்கு மாகா­ணத்தில் எச் வல­யத்தில் வழங்­கப்­ப­ட­வி­ருந்த காணி­களில் மிகப் பெரும்­பா­லான பங்கு தமிழ் முஸ்லீம் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் என உத்­த­ர­வா­தமும் வழங்­கப்­பட்­டது.

இம் முன்­மொ­ழிவூ ஏற்றுக் கொள்­ளப்­பட்டு அதற்­க­மைய பத்­திரம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இந்தப் பத்­தி­ரத்தின் அடிப்­ப­டை­யி­லேயே 13வது அர­சியல் அமைப்புத் திருத்­தத்தில் காணி சம்­பந்­த­மான சரத்­துக்கள் சேர்க்­கப்­பட்­டன. காணி­களை வழங்கும் போது தேசிய இன விகி­தா­சாரம் பேணப்­பட வேண்டும் என்றும் எனினும் குறிப்­பிட்ட திட்­டத்தால் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை

வழங்க வேண்டும் என்றும் அம் மாவட்­டத்தில் உள்ள காணி அற்­ற­வர்­க­ளுக்கு காணி­களை வழங்கி அதற்கு மேல­தி­க­மாக உள்ள காணி­களை அந்த மாகா­ணத்தில் உள்ள மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்றும் தௌpவாக அர­சியல் அமைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உண்­மையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தேசிய இன விகி­தா­சா­ரத்­துக்குப் பதில் மாகாண விகி­தா­சா­ரமே பேணப்­பட வேண்டும். ஆனால் அது­கூடப் பேணப்­ப­டாமல் பெரும்­பான்­மை­யி­னரைக் குடி­யேற்றி வரு­வதே எமக்குப் பெருத்த ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது.

இது­வரை வழங்­கப்­பட்­டுள்ள காணி­களில் தங்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய இன­வி­கி­தா­சா­ரப்­ப­டி­யான காணிகள் கிடைக்­கா­ததால் புதிய திட்­டங்­களில் அவர்­க­ளுக்­கு­ரிய பங்­குகள் வழங்­கப்­பட வேண்டும். அப்­படி வழங்­கப்­ப­டாத காணித் துண்­டு­களை வழங்­கு­வ­தற்கு ஒரு கால நிர்­ணயம் நிர்­ண­யிக்­கப்­ப­ட­வேண்டும். இப்­ப­டி­யான குடி­யேற்­றங்கள் செய்யூம் போது அந்த மாகா­ணத்தின் இனப்­ப­ரம்­பலை மாற்­றாத வகையில் குடி­யேற்­றங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இவை எல்லாம் அர­சியல் அமைப்பில் ஏற்­க­னவே இருக்கும் ஏற்­பா­டுகள். எனினும் இவற்­றை­யெல்லாம் உதா­சீனம் செய்து வடக்கு மாகா­ணத்தின் எல்லைப் பகு­தியில் எல் வலயம் என்ற பெயரில் பெரும்­பான்­மை­யின மக்­களின் குடி­யேற்­றத்தை தமிழ் மக்­களின் பலத்த ஆத­ர­வூடன் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்த அரசு மிகத் தீவி­ர­மாக மேற்­கொண்­டு­வ­ரு­வது கவலை அளிக்­கின்­றது. தற்­பொ­ழுது அவ்­வா­றான சிங்­கள குடி­யேற்­றங்கள் நடை­பெ­ற­வில்லை என்று அர­சாங்கம் கூறி­வ­ரு­கின்­றது. ஆனால் அவ்­வாறு குடி­யேற்­றங்கள் நடை­பெற்­ற­தற்­கான ஆதா­ரங்கள் எங்­க­ளிடம் உண்டு. உதா­ர­ணத்­திற்கு றுக்­மல்­து­ஷார லிவேரா என்­ப­வ­ருக்கு கரு­நாட்­டுக்­கே­ணியில் எல் வல­யத்தில் ஒரு ஏக்கர் காணி கொடுக்­கப்­பட்­ட­தற்கு அத்­தாட்சி தற்­போது என் கைவசம் உண்டு. அதனை இத­னுடன் இணைத்து அனுப்­பு­கின்றேன்.

வடக்­கிற்கும் கிழக்­கிற்கும் இடையில் பாரம்­ப­ரி­ய­மாக இருக்­கின்ற தமிழ் மக்­களின் உறவைத் துண்­டித்து வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்­தாழும் தந்­தி­ரத்தின் உத்­தி­யா­கவே இவ்­வா­றான குடி­யேற்­றங்­களை அரசு மேற்­கொள்­கின்­றது என்று நாங்கள் கரு­து­கின்றௌம்.

இத் திட்­டங்கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும். அர­சியல் அமைப்புத் திட்டத்தில் கூறப்பட்ட வகையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கை எல் வலயத்திலும் எதிர்காலத் திட்டங்களிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியேற்றவாசிகளைத் தெரிவூ செய்யூம் போது மாகாணசபையின் ஆலோசனையூம் பெறப்பட வேண்டும் என்று அரசியல் அமைப்புத்

திட்டத்தில் தௌpவாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதும் எமக்குத் தெரியாத வகையிலேயே குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவது கண்டிக்கப்படக் கூடியதும் அனுமதிக்க முடியாததுமாகும். இந்த ஐனநாயக விரோத இனப்பரம்பலின் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கையையூம் எமக்கு கிடைக்க வேண்டிய பங்கைத்தராது மேலும் தமிழ்ப் பகுதிகளில் நூறு வீதம் சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்குவதையூம் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றௌம். அதற்காக இன்று முல்லைத்தீவில் நடைபெறுகின்ற மக்கள் போராட்டத்தை நாங்கள் முற்றிலும் ஆதரிக்கின்றௌம் எனத் தெரிவித்து மகாவலி நீர் எமக்கு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியூம் மகாவலி அதிகாரசபையின் செயற்பாட்டை வட கிழக்கு மாகாணங்களில் முடிவூக்கு கொண்டுவருவதா இல்லையா என்பது பற்றியூம் எமது மக்கள் வருங்காலத்தில் தீர்மானிப்பார்கள்என்றார்.

-http://eelamnews.co.uk

TAGS: