இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி

கம்­பகா – படு­வத்­த­வில் இரா­ணு­வத்­தின் இர­க­சிய முகாம் இருந்­தது தமக்­குத் தெரி­யும் என்று இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் முன்­னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர தெரி­வித்­துள்­ளார்.

2008ஆம் ஆண்டு மே மாதம் ஊட­க­வி­ய­லா­ளர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட பின்­னர் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வம் குறித்து நடத்­தப்­ப­டும் விசா­ர­ணை­க­ளின் ஒரு கட்­ட­மாக,

மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். அவர் தக­வல்­களை வெளி­யிட மறுக்­கி­றார் என்­றும், விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­க­வில்லை என்­றும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் நீதி­மன்­றத்­தில் கூறி­யி­ருந்­த­னர்.

இந்த வழக்கு கல்­கிசை நீதி­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட போது, மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­க­ர­வின் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி சில்வா, ஊட­க­வி­ய­லா­ளர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட பின்­னர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இட­மான, கம்­பகா படு­வத்­த­வில் இரா­ணு­வத்­தின் இர­க­சிய முகாம் இருந்­தது பற்றி தமது கட்­சிக்­கா­ர­ருக்­குத் தெரி­யும் என்று கூறி­னார்.

அரச சட்­ட­வா­ளர் லக்­மின் கிரி­ஹ­கம முன்­னி­லை­யாகி, அமல் கரு­ணா­சே­கர தக­வல்­களை மறைத்து, முக்­கி­ய­மான இரா­ணுவ இர­க­சி­யங்­களை கண்­ட­றி­யும் சூழலை உரு­வாக்கி விட்­டார் என்று தெரி­வித்­துள்­ளார்.

இந்த வழக்­கின் முதல் சந்­தேக நப­ரான மேஜர் புலத்­வத்த, வழங்­கிய சாட்­சி­யத்­தில், இரா­ணு­வப் புல­னாய்­வுப் பணி­ய­கத்­தின் வழி­காட்­ட­லி­லேயெ படு­வத்த இர­க­சிய முகாம் பேணப்­பட்­டது என்று வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வில், மரு­தானை திரி­பொலி முகா­மில் பணி­யாற்­றிய மேஜர் அன்­சா­ரி­டம் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் வாக்­கு­மூ­லம் பதிவு செய்­துள்­ள­னர். அதில், தொம்பே இர­க­சிய முகாம் தொடர்­பாக அவர் அனைத்து விவ­ரங்­க­ளை­யும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் என்­றும், அரச சட்­ட­வா­ளர் கிரி­ஹ­கம தெரி­வித்­தார்.

அதை­ய­டுத்து, சட்­டத்­த­ரணி செகான் சில்­வா­வி­டம், வழங்­கிய தக­வல்­கள் தொடர்­பாக, மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­க­ர­வி­டம், வாக்­கு­மூ­லம் பெறும்­படி குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

-http://eelamnews.co.uk

TAGS: