சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை – சுத்துமாத்து சுமந்திரன்

சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சுத்துமாத்து சுமந்திரன் தெரிவித்துள்ளார் .ஒரு வேளை சிங்கள மக்கள் தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வினை கொடுப்பதற்கு முன் வந்தாலும் சுமந்திரன் அதற்கு சம்மதிக்க மாட்டார் .

காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் எதுவமே அற்ற மாகாண சபை முறைமைக்காகவா இத்தனை மாவீரர்களை பறிகொடுத்தோம் ?இத்தனை ஆயிரம் கரும்புலிகள் வெடித்து சிதறினார்கள் ?

சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தமிழர்களுக்கு தேவையில்லை என்று சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற நகைச்சுவை உரையாடல் கீழே ……..

சுமந்திரன் :- தலைவரே தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு தேவையில்லை. மாகாணசபை முறைமையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினா போதும்.என்ன நான் சொல்லுறது. முட்டாள் பசங்க இதையும் அரசியல் சாணக்கியம் எண்டு நினைச்சு செம்படிப்பாங்க. சமஸ்டிக்கு பதிலாக சட்னியும் இட்லியும் வாங்கி கொடுப்பம்.உங்களுக்கு ஓகே தானே ஐயா?

சம்பந்தன் ஐயா :- தம்பி நீ என்ன சொன்னாலும் நான் தலையாட்டுவன்.ஏன்னா இப்ப தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் நீ தான்.நான் சும்மா டம்மி தலைவர்.அது போக ரணிலுக்கும் மைத்திரிக்கும் ஆமா போட்டு பழகிட்டன்.சோ நீ இப்ப சொன்னது எனக்கு 100% ஓகே.ஆனா ஒரு கண்டிசன். சட்னியும் இட்லியும் வாங்கேக்க எனக்கும் கண்டிப்பா தரணும்.சண்முகாஸ் ஹோட்டல் ல வாங்கு கண்டியோ.

சுமந்திரன் :- இது இது தான் எனக்கு உங்க கிட்ட பிடிச்சது.இது இதை தான் எதிர்பார்த்தன். தமிழருக்கு சமஸ்டி கொடுக்க சிங்களவர் ஓகே சொன்னாலும் நான் விட மாட்டன் கண்டியலோ.

-http://eelamnews.co.uk

TAGS: