கடைசியில் தலைவரையும் “கேரளா” மலையாளியாக மாற்றிய இந்தியா !

தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை, ஒரு மலையாளி என்றும். அவரது குடும்பத்தினர் இன்றுவரை கேரளாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறி , இந்திய தொலைக்காட்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த கூத்தை நீங்கள் பாருங்கள் …

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு மலையாளி ஆவார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர். அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து உள்ளார்.இவரின் பெயர் ஜானகி அம்மா. கொல்லத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் இவரது இல்லம் உள்ளது. ஜானகி அம்மாவின் தாயுடன் கூடப் பிறந்த ஆறு சகோதரர்களில் ஒருவர்தான் வேலுப்பிள்ளை. ஜானகி அம்மாவின் தாயின் பெயர் நானி அம்மா.இந்நிலையில் பிரபாகரனுக்கு மைத்துனி என்று சொல்லி உரிமை கொண்டாடுகின்றார் ஜானகி அம்மா.

-athirvu.in

 

TAGS: