வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனுக்கு தங்க கூரை அமைப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தங்கித்தில் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

நேற்று பொற்கூரைக்கான ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இன்று காலை 06 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்தார்.காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசை எழும்ப கலச அபிஷேகம் நடைபெற்றது.

தென்னிந்தியாவில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் தலைமையிலான குழுவினர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி , ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன.இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக நல்லூர் கந்தசுவாமி கோவில் நேற்றுமுதல் மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தற்போது நடைபெற்று வரையில், நேற்றைய தினம் பொற்கலச கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

-eelamnews.co.uk

TAGS: