புத்தரால் ஆக்கிரமிக்கப்பட்ட பழைய செம்மலை! பூர்வீகப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு!

முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க ஆலயமாக காணப்பட்டுள்ளது மீள்குடியேற்றத்தின் பின்னர் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு புத்தர் சிலை வைப்பக்கப்பட்டு வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன அருகில் பிள்ளையார் ஆலயமும் காணப்பட்டுள்ள நிலையில் 10.09.18 இன்று திங்கட் கிழமை பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி தங்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த பகுதியில் பாரிய ஆக்கிரமிப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதும் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
தமிழர்களின் முதன்முதல் கடவுளான பிள்ளையார் ஆலயமும் அந்த பகுதியில் அமைந்துள்ளமையினால் இந்து சமய வழிபாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் பிரதேச மக்களால் பொங்கல் பொங்கி தொன்று தொட்டுவந்த மரபு வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்கள்

-http://eelamnews.co.uk

TAGS: