கேர்ணல் ரமேஷை இராணுவமே கொன்றது: உறுதிப்படுத்திய மஹிந்தவின் அமைச்சர்..

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தயபதிகள்உள்ளிட்ட போராளிகள் மற்றும் சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள்அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியைவகித்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், உள்ளூர்மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பலம்பெயர் தமிழ்அமைப்புக்களும் கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டுக்களைசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரையும்,முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட மஹிந்தவாதிகளையும்இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்குழுவின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவே இந்தத் தகவலை கூறியிருக்கின்றார்.

கொழும்பு பொரளை பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பிலேயே எஸ்.பி.திஸநாயக்க இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இந்தஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் மற்றுமொருமுக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் கலந்துகொண்டிருந்த போதிலும், எஸ்.பி.திஸாநாயக்கவின்கூற்றுக்களை நிராகரிக்கவில்லை.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்குபதிலளிக்கையில், “ எங்களுக்கும் தெரிந்த சிலர் சரணடைந்தனர். ஆனால் அவர்களையும் கொன்றுவிட்டனர்என யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் மஹிந்தவின் அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களுக்கான சிறப்புத் தளபதி கேர்ணல் ரமேஷ் சரணடைந்த நிலையிலேயேசிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபாலசிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினராக எஸ்.பி குறிப்பிட்டார்.

கருணா என்ற பெயரில் பிரபல்யமடைந்திருந்த விநாயகமூர்த்திமுரளிதரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சிறிலங்காஇராணுவத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களுக்கானசிறப்பு இராணுவத் தளபதியாக தம்பிராஜா துரைராஜசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதிரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.

யுத்தகாலத்தில் கேர்ணல் ரமேஷ் என அறியப்பட்ட அவர் சிறிலங்காஇராணுவத்திடம் சரணடைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக தனக்கு தொலைபேசி அழைப்பொன்றைஎடுத்திருந்ததாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தான் சரணடையப்போவதாகவும் ஆங்கிலத்தில் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

ரமேஷ் சரணடைந்தார், ரமேஷ் கொல்லப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள்நிகழ்ந்திருக்கின்றன என்றும் எந்தவித பொருட்டும் இல்லாமல் மஹிந்தவாதியான எஸ்.பி. திஸநாயக்க ஊடகவியலாளர் முன்னிலையில் கூறினார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பில் கேர்ணல் ரமேஷ் இருந்தகாட்சிகளும், அதன் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் அடங்கியகாணொளியொன்றை பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. எனினும் சிறிலங்காவின்மமுன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அதனை நிராகரித்திருந்ததுடன்,குறித்த காணொளி சோடிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தது.

குறித்த காணொளியில் கேர்ணல் ரமேஷிடம் கேள்விகளை கேட்கும்இராணுவ சீருடையுடன் காணப்பட்ட சிப்பாய்களின் கூற்றுகளுக்கு அமைய அன்றைய தினம் 2009மே மாதம் 22 ஆக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் 2009 மே மாதம் 19 ஆம்திகதியே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்காவின் அப்போதைய அரச தலைவர்மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதானச் செயலகத்தின் தலைவர் சீவரத்னம் புலித்தேவன்ஆகியோர் யுத்தத்தின் போதே கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்த போதிலும், வெள்ளைக்கொடியுடன்அவர்கள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டதாக நம்பகரமானசாட்சிகளுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகளானஇவர்கள் தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மறைமுகமாக சில தகவல்களைவெளியிட்டார்.

“ நீங்களும், நாங்களும் குறிப்பிடாதஇன்னும் சிலரும் இருந்தனர். அவர்களும் சரணடைந்த நிலையிலேயே கொல்லப்பட்டனர் என்பதை நாம்பகிரங்கமாக கூறாதிருக்கும் பலரும் இருக்கின்றனர் என்பதை அனைவரும் நன்கு அறிவோம்”என்று டஎஸ்.பி.கூறினார்.

இன்றைய இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமுன்னாள் மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புஅமைச்சராக இருந்தசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, போரின்போது அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்பாவி பொது மக்களை படுகொலைசெய்ததற்கான முழுப் பொறுப்பையும்இறுதிக்கட்ட போரின் போது சிறிலங்கா இராணுவத்திற்கு தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல்சரத் பொன்சேகாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான பெரேராகுறிப்பிட்டார்.

-athirvu.in

TAGS: