சிறிலங்காவின் முப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தனஅமெரிக்காவில் தஞ்சம் கோரி விண்ணப்பத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்தப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபரான சிறிலங்காகடற்படையின் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன் கமாண்டர்சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக முன்னாள் கடற்படைத்தளபதியான சிறிலங்காவின் தற்போதைய முப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தனமீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவரை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தமாறுசி.ஐ.டி யினர் என்ற குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கொழும்பு கோட்டை பிரதானநீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய அவரை வாக்குமூலமொன்றை பதிவுசெய்துகொள்வதற்காக செப்டெம்பர் 11ஆம் திகதி கொழும்பு ஒன்றிலுள்ள தமது அலுவலகத்திற்கு வருமாறு இரகசியப் பொலிசார்அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இரகசியப் பொலிசாருக்கும், நீதிமன்றத்திற்கும்அறிவிக்காது சிறிலங்கா அரசின் சார்பில் செப்டெம்பர் 16 ஆம் திகதியான இன்றைய தினம்மெக்சிகோவில் நடைபெறும் அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக அங்குசென்றுள்ளார்.
இது குறித்து CID யினர் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியதற்குஅமைய அவர் நாடு திரும்பியதும் அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் முன் அனுமதி இன்றி சிறிலங்காவின் முப்படைகளின்தளபதி மெக்சிகோ சென்றதாலும், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபருக்குதலைமறைவாக இருக்க உதவிய குற்றத்திற்காகவும் CID யினரால் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.
இந்த நிலையிலேயே அவர் நாடு செல்வதற்குமுன்னதாக தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடாகஅமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள சிங்கள ஊடகங்கள் இன்றையதினம் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இது குறித்த தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகஐ.பி.சி செய்திப் பிரிவு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தொடர்பு கொண்ட போதும்அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. செப்டெம்பர் 16 ஆம் திகதியான இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் எந்தவொரு தூதரக அதிகாரியையும் தொலைபேசியில்தொடர்புகொள்ள முடியாதுள்ளது. எவ்வாறாயினும் நாம் தொடர்ந்து அந்த முயற்சியைமுன்னெடுத்துள்ளதுடன், தொலைபேசித் தொடர்புகிடைத்ததும் அதன் உண்மைத் தன்மையை வெளியிடுவோம்.
அமெரிக்காவின் கிறீன் காட் வீசா அனுமதியை கைவசம்வைத்திருக்கும் சிறிலங்காவின் முப்படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தன தான்சம்பந்தப்படாத ஆட் கடத்தல் வழக்கொன்றில் தன்னை குற்றவாளியாக்கி தன்னை தண்டிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் அதிலிருந்து தன்னை பாதுகாக்க உதவுமாறும்அமெரிக்காவிடம் கோரியிருக்கின்றார்.
இதேவேளை அட்மிரல் ரவீந்திர விஜேகுணர்தனவைவிசாரணைக்கு உட்படுத்துவதற்கு சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவும் கடும்எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
செப்டெம்பர் 13 ஆம் திகதியான வியாழக்கிழமை அவசரஅமைச்சரவைக் கூடட்மொன்றை நடத்தியிருந்த சிறிலங்கா அரச தலைவர், ஊடகவியலாளர்கள் கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் 11 இளைஞர் கடத்தப்பட்டுகாணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் CID யினரின் நடவடிக்கைகளை கடுடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வுஅதிகாரிகள் பலர் கைதுசெய்யப்பட்டு நீண்டநாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும்அவர்களுக்க எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாதுள்ளமை தொடர்பில்சிறிலங்கா அரச தலைவர் கடும் விசனம் வெளியிட்டுள்ளதுடன், வழக்குத் தொடர முடியாவிட்டால் எதற்காக கைதுசெய்துவிளக்கமறியலில்வைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா பொலிஸ் மா அதிபர் மற்றும் CID க்கான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் வினவியுள்ளார்.
இதன்போது முப்படைகளின் தளபதி அட்மிரல்ரவீந்திர விஜேகுணர்தன மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தொடரமுடியாதுவிடின் அவரை துன்புறுத்தக்கூடாது என்றும் சிறிலங்கா அரச தலைவர் பொலிஸ்தலைமை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவொன்றையும் பிறப்பித்திருக்கின்றார்.
குறிப்பாக படைப் புலனாய்வாளர்கள் மற்றும்படைத் தளபதிகளை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதால் தனது அரசு மீது சிங்கள்மக்கள் மாத்திரமன்றி படையினர் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும்சுட்டிக்காட்டியுள்ள சிறிலங்கா அரச தலைவர், இனிமேலும் இவ்வாறான நெருக்கடிக்குள் அரசாங்கத்தையும், தன்னையும் தள்ளிவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
-athirvu.in