தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்காவின் பெண் படை அதிகாரிகள்; வெளியாகியது உண்மை..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவம், பொலிஸ்உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் இருந்ததாக ஜெனீவாவில் இன்றைய தினம்வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் அதிர்ச்சித் தகவலொன்றுஅம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால்அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில்வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் அம்பலப்படுத்தப்பட்டமிகவும் பயங்கரவமான தகவல்களை அடங்கிய இந்த அறிக்கை மனித உரிமை சட்ட நிபுணர்யஸ்மின் சூகா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயறதிட்டத்தினால்இன்று வெளியிடப்பட்டுள்ளது.

“மௌனம் கலைந்தது” தப்பிவந்த ஆண்கள் சிறிலங்காவில் யுத்தத்தைமையப்படுத்தி நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்” என்றஅறிக்கை சிறிலங்காவிலிருந்து தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களைமையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரரமான கொடூரங்கள் அடங்கிய இவ்வான தகவல்களை இதற்கு முன்னர் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று இ யஸ்மின்சூகா தலைமையிலான சிறிலங்காவின் உண்மைக்கும் நீதிக்குமான செயறதிட்டம் பகிரங்கப்படுத்தியஇந்த அறிக்கையை தயாரித்த பெல்ஜியம் லூவன் பல்கலைக்கழனத்தின் கலாநிதி ஹெலீன் டூகே ஐ.பீ.சிதமிழுக்க வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.

“உலகநாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும் போது சிறிலங்காவில் தொடரும் கொடூரங்கள்மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது. ஏற்கனவே பொஸ்னியா குறித்து ஆய்வு செய்திருக்கின்றேன்.ஆனால் சிஙிலக்ளாவில் தடுப்புக் காவலில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு,பல தடவைகள் பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவலக்ளை கேள்விபடும் போதுமிகவும் மோசமான கொடூரத்தை உணர்கின்றேன். பலர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கஉட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நான் இதற்கு முன்னர் கண்டிருக்கவோ,கேள்வி பட்டிருக்கவோ இல்லை. மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலான கொடூரங்களாகஇவை இருக்கின்றன” என்றார் டூடே.

ஜெனீவாவில் வைத்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கைக்கு 14வயதுடைய சிறுவனும் சாட்சியமளித்திருக்கின்றார். அதேவேளை இந்த அறிக்கைக்கு தகவல்வழங்கியவர்களில் வயது கூடிய ஆண் 40 வயதை கடந்த ஒருவர் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை விசாரித்த புலுனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண்அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒருவர்தெரிவித்துள்ளார்.

இராணுவ சீருடை அணிந்திருந்த அந்த பெண் அதிகாரி பொல்லுகளால்தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை பாதணிக் கால்களால் மிதித்து, நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தியதாகவும், தமிழீலேயேஅவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப்பெண் என்றும் கொடூரத்திற்குமுகம்கொடுத்த ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்குஅமைய, அவர் உட்பட தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண்படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.

“ பெண் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு எம்மைஆடைகளை களைந்து அழைத்துச் சென்றனர். இருவர் பொலிஸ் சீருடையான கட்டை பாவடைஅணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர்கர்ப்பிணிப் பெண்” என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ்இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கொடூரமான சித்திரவதைகளுக்கு தொடர்புடைய அதிகாரிகள்சிறிலங்கா இராணுவம், பொலிஸ், புலனாய்வுப்பிரிவுகள் உட்பட சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ITJP அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் சித்திரவதைகள் தொடர்பில் கடுமையான சடட்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. எனினும் சிறிலங்கா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எடுத்தமாத்திரத்தில் நிராகரிப்பதன் ஊடாக விசாரணைகளை மூடி மறைப்பதையே வாடிக்கையாகசிறிலங்கா அரசு கடைபிடித்து வருவதாக புதிய அறிக்கையை தயாரித்த கலாநிதி ஹெலீன் டூகேதெரிவிக்கின்றார்.

“இல்லை.என்னை பொறுத்தவரை அப்படி நிகழ்ந்ததாகவும் நான் கருதவில்லை. அனைதையும் நிராகரிப்பதையேசிறிலங்கா வாடிக்கையாக கொண்டிருக்கின்றது. இந்த நடைமுறை உலகின் வேறு எந்தவொரு நாடும்கடைபிடிப்பதாக நான் கருதவில்லை. யுத்தத்தின் பின்னர் போல்கன் நாடுகளில் நிலைமாறுகாலநீதிப் பொறிமுறையை நிலைநாட்டுவதற்கு இருந்த சந்தர்ப்பத்தை விட சிறிலங்காவில்நீதியை நிலைநாட்டுவதற்கு இருக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே இருப்பதாக நான்பார்க்கின்றேன்” என்றார் ஹெலீன் டூகே.

இன்றைய இந்த அறிக்கை தொடர்பில் ஜெனீவா அமர்வுகளில்கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருபவரானமன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலையும் அதிர்ச்சி வெளியிட்டார்.

இதேவேளை ITJP இன்இந்த அறிக்கை வெளியிடப்பட்ட ஜெனீவா நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தைச்சேர்ந்த முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் சிங்கள கடும்போக்குவாத அமைப்புக்களின்பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இந்தக்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை என்றும் குற்றம்சாட்டி குழப்பத்தை ஏற்படுத்தமுற்பட்டனர்.

-athirvu.in

TAGS: