புலிகள் காலத்தில் இல்லாத சமூகக் கொடுமைகள்! எத்தகைய தண்டனை வழங்க வேண்டும்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அதாவது தமிழீழத்தில், காதலி ஒருவரை போகித்துவிட்டு ஏமாற்றி கொலை செய்த வாலிபர் ஒருவர் நடுச் சந்தியில் வைத்து மின்சாரக் கம்பியில் தூக்கி கட்டி நெற்றியில் சுடப்பட்டு அழிக்கப்பட்டார். ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி, அவரை கொலை செய்த அந் நபரை இந்த மண்ணில் இனியும் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று புலிகள் அமைப்பு கருதியது. தமிழீழ சட்டதிட்டங்களை மீறும் இத்தகைய நபர்களுக்கு இத்தகைய தண்டணைகளையே இயக்கம் வழங்கியிருந்தது.

தமிழீழத்தில் தமிழீழ காவல்துறையும் தமிழீழ நீதிமன்றமும் குற்றங்களை தடுத்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும் சில நபர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டபோது, அவர்களை குறித்த துறைகள், மன்றுகளை கடந்து தண்டணைகள் அழிக்கப்பட்டன. இங்கே முக்கியமான விடயம் யாதெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு கூட இந்த கடுமையான சட்டங்கள் குறித்து எச்சரிப்புக்கள் வழங்கப்படுவதுண்டு. எனினும் ஒரு விடுதலைப் புலியேனும் ஒழுக்கத்தை மீறியதாக வரலாறு இல்லை. சிங்கள இராணுவ எதிரிகூட அப்படிச் சொல்ல மாட்டான்.

இன்று தமிழீழத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன. கடந்த சில நாட்களின் முன்னதாக ஆடை தொழிலகத்தில் பணி புரியும் பெண் ஒருவரை ஆண் ஒருவர் காதலித்து ஏமாற்றி, வயிற்றில் குழந்தை உண்டான நிலையில், அவரை கொலை செய்திருந்த நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியை இந்த நிகழ்வு வெட்கி தலைகுனியச் செய்திருந்தது. கிளிநொச்சி எத்தகைய செயல்களால் அறியப்பட்ட நகரம். வீரத்தாலும் சமாதானத்தாலும் கிளிநொச்சியின் பெயரை புலிகள் உலகறியச் செய்தனர்.

ஆனால் இன்று சில ஈனப் பிறவிகள் கிளிநொச்சியின் மகிமையை கெடுக்கின்றனர். இதைப்போலவே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளும் பெருகியுள்ளன. பெண்களை காதலித்து ஏமாற்றுதல், பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுதல் என பல்வேறு குற்றங்கள் யாழிலும் நிறைந்துள்ளன. இந்த சூழலில் வன்னியூர் செந்தூரனின் மனைவி போதநாயகி கடந்த இரு நாட்களின் முன்னர் திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாகத்தில் இவர் விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போதநாயகி நன்றாக படித்தவர். ஊடகக் கற்கை பயின்றவர். திறமையானவர். அவரது திறமையின் வெளிப்பாடே பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற பதவியையும் பெற்றிருந்தார். அத்தகைய நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை கூறுகின்றது. உண்மையில் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பது தொடர்பிலும் அவரது தற்கொலையின் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பதையும் காவல்துறையினர் ஆராய வேண்டும்.

அவர் இறுதியாக எழுதியுள்ள கவிதை, தனது தற்கொலைக்கு யார் காரணம் என்பதையும் என்ன காரணம் என்பதையும் நன்றாக தெளிவுபடுத்துகிறது. அதனையும் தற்கொலைக்கு காரணமானவரை காட்டிக் கொடுக்காமல், அவர் அக் காரணத்தை அறிய வேண்டும் என்ற நோக்கில் கவிதை இடித்துரைக்கிறது. கணவர் செந்தூரனின் அன்பு கிடைக்காமையினாலும் அவரால் போதநாயகி களங்கப்படுத்தப்பட்டிருப்பதாலும் கலங்கப்படுத்தப்பட்டிருப்பதாலும் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதை தெளிவாக எடுத்துரைத்துவிட்டே அவர் தன்னை அழித்துக் கொண்டுள்ளார்.

போலி முகத்துடன் அப்பாவி பெண்கை பலிக்கடா ஆக்கும் நபர்களின் முகங்களை அம்பலப்படுத்த வேண்டும். இவரது கொலைக்கு காரணமானவர் ஏற்கனவே ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் வைத்து திருமணம் முடித்துவிட்டு, பின்னர் அவரை ஏமாற்றிவிட்டு இவரை திருமணம் முடித்துள்ளதாகவும் முகப்புத்தகத்தில் செய்திகள் எழுதப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் என்றும் விடுதலைப் புலிகள் என்றும் பேசிக் கொண்டு, அந்த விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அவர்களின் சட்டங்களுக்கு எதிராகவும் வாழும் இவர்களுக்கு விடுதலைப் புலிகள் கால – விடுதலைப் புலிகள் பாணி தண்டனை வழங்க வேண்டும்.

எமது இனம் எதிரியினால் நன்றாக திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்படுகின்றது. எமது இனம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும், சிறையில் உள்ள தமிழ் கைதிகளின் விடுதலைக்காகவும், நிலங்களுக்காகவும், இனப்படுகொலைக்கான நீதிக்காகவும், இனப்பிரச்சினைக்கான தீர்வு உரிமைக்காகவும் போராடி பெரும் துயரை சந்திக்கிறது. இந்தக் காலத்தில் எமது மண்ணின் மாண்பை அழித்து, எமது மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை ஒடுக்கி அடக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டக் களத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

இத்தகைய கொடூரமான செயல்கள் எம்மை சிங்களவனின் முன் தலைகுனிய வைக்கும். இத்தகைய நபர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வந்து பதில் அளிக்க வேண்டும். நன்றாக வெளுவை கொடுத்து, நாலு நாட்கள் தமிழீழ சிறையில் இருந்தால் மனித தன்மை பெறுவார்கள். இத்தகைய நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். விழிப்பே விடுதலையின் முதல்படி. ஒவ்வொரு ஈழத் தமிழரும் சுய ஒழுக்கமான வாழ்வை வாழ்வதே எமது விடுதலையை வழிப்படுத்தும். பெண்களை, சிறுவர்களை மதிக்கின்ற மண்ணிலேயே தமிழீழ சுதந்திரம் சாத்தியமாகும்.

-http://eelamnews.co.uk

TAGS: