இறுதி போர் தொடர்பான உண்மை ஜனாதிபதியே வெளிப்படுத்த வேண்டும்: சுமந்திரன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது.

எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் என்றும் கூறினார்.

அதனைவிடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாக வைத்து பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி பேசினால் அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

-tamilcnn.lk

TAGS: