சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், பாரிய போராட்டமொன்றை கொழும்பில் முன்னெடுக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில், “அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இருப்பினும் அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது. இவ்வாறு அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு மௌனம் சாதித்து வருமானால் சர்வதேச ராஜதந்திரிகளை நாடுவதை தவிர வேறு வழியில்லை.” என்றுள்ளார்.
-4tamilmedia.com